அறிந்து கொள்ளுங்கள்

AI-ஆல் இந்த வேலைகளுக்கு எப்போதும் ஆபத்தே கிடையாது - இளைஞர்களுக்கு தெம்பு கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

Published On 2026-03-01 14:06 IST   |   Update On 2026-03-01 14:06:00 IST
  • எனவே அந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் எந்த பாதிப்பும் இருக்காது.
  • எலான் மஸ்க் முன்பு கூறியிருந்த்தும் குறிப்பிடத்தக்கது.

ஏஐ மனித வேலைகளை பறிக்குமா என்ற விவாதம் உலகளவில் நடந்து வருகிறது. இதுகுறித்து தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இன்போனிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், "ஏஐ என்பது ஒரு சாதனம் மட்டுமே. மனிதனின் சிந்திக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.

இளைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தத் தொழில்நுட்பங்களை ஒரு உதவியாளராகப் பயன்படுத்தி அவற்றில் தேர்ச்சி பெறுவதுதான்.

ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்திக் கற்றுக்கொண்டால், ஐடி துறையில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்" என்று ஊக்கம் அளிக்கும் வகையில் நேர்மறையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபரும் Zoho தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " ஒரு மனிதர் தனது மதிப்பைப் பணத்தை வைத்தோ அல்லது அவரது அறிவுசார் அந்தஸ்தை வைத்தோ கணக்கிட்டால், ஏஐ ஆல் அவருக்குப் பெரிய மன உளைச்சலே ஏற்படலாம்.

ஆனால் குழந்தைகளுக்கு கற்பிப்பது, முதியோரை பராமரிப்பது, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு விவசாயத்துக்கு திரும்புவது, காட்டில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றுவது, கோயில் பூசாரிகள் யாரும் வராவிட்டாலும் தினசரி சடங்குகளை செய்வது, இசைக் கலைஞர்கள் தினமும் பயிற்சி செய்து சிறிய எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருந்தாலும் கச்சேரி நடத்துவது போன்றவை பணத்துக்காக செய்யப்படுவதில்லை. எனவே அந்த வேலைகளுக்கு ஏஐ ஆல் எந்த பாதிப்பும் இருக்காது.

எனவே மனிதர்கள் எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை மையமாகக் கொண்டு வாழலாம்" என்று தெரிவித்துள்ளார். வேம்புவின் இந்த கருத்துக்கு நேரமறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

"எதிர்காலத்தில் வேலை என்பது ஒரு விருப்பமாக மட்டுமே இருக்கும்; மக்கள் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது விருப்பத்திற்காகவோ மட்டுமே வேலை செய்வார்கள்" என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முன்பு கூறியிருந்த்தும் குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News