அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 99 விலையில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா

Published On 2026-03-01 18:54 IST   |   Update On 2026-03-01 18:54:00 IST
  • அன்லிமிட்டெட் என்றால் உண்மையான அன்லிமிட்டெட் என்று பொருள்படாது.
  • இது மற்ற டேட்டா வவுசர்களை விட தனித்துவம் பெற்றுள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா லிமிட்டெட் உள்ளது. அவ்வப்போது தனது சலுகைகளை மாற்றியமைத்து வரும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் ரூ. 99 விலையில் டேட்டா வவுச்சர் ஒன்றை அறிவித்தது. அன்லிமிட்டெட் டேட்டா பலன் வழங்குவதால் இது மற்ற டேட்டா வவுசர்களை விட தனித்துவம் பெற்றுள்ளது.

எனினும், வோடபோன் ஐடியா மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களின் கூற்றுப்படி அன்லிமிட்டெட் என்றால் உண்மையான அன்லிமிட்டெட் என்று பொருள்படாது. இது ஒரு ஆட்-ஆன் டேட்டா பேக் ஆகும், இதன் காரணமாக பயனர்கள் ஏற்கனவே பிரீபெயிட் சலுகை ஒன்றை ரீசார்ஜ் செய்து அதற்கான வேலிடிட்டி முடியாமல் இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

வோடபோன் ஐடியாவின் டேட்டா வவுச்சர்கள் பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இவை உரிமம் பெற்ற சேவை பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ரூ. 99 டேட்டா வவுச்சரின் பலன்களை பொருத்தவரை இது அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது. எனினும், இதில் அன்லிமிட்டெட் டேட்டா நாள் ஒன்றுக்கு 20 ஜி.பி. வரை பொருந்தும். இந்த வவுச்சரின் வேலிடிட்டி 2 நாட்கள் ஆகும்.

அந்த வகையில், ஏற்கனவே பிரீபெயிட் ரீசார்ஜ் செய்து அவசர டேட்டா தேவைப்படும் பட்சத்தில் பயனர்கள் இந்த டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் செய்து 40 ஜி.பி. வரையிலான டேட்டா பெற முடியும். இது தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 64 கிலோபைட் (Kbps) ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த வவுச்சரின் படி பயனர்கள் நாள் ஒன்றுக்கு 20 ஜி.பி. டேட்டாவுக்கு ரூ. 49.5 அல்லது ரூ. 50 வரை செலவிட நேரிடும்.

இந்த வவுச்சரில் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் இது 5ஜி பயன்படுத்துவோருக்கு தேவைப்படாது. எனினும், 4ஜி பயனர்களுக்கு இது குறுகிய காலக்கட்டத்தில் பயன்படுத்த அளவுக்கு மீறிய டேட்டா என்றே கூறலாம். இது குறைந்த விலையில் கிடைக்கவில்லை என்ற போதிலும், அவசர தேவைக்கு ஆட்-ஆன் டேட்டா என்ற முறையில் இது குறிப்பிட்ட பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். 

Tags:    

Similar News