அறிந்து கொள்ளுங்கள்

இன்ஸ்டாகிராமில் 18 வயதிற்குட்பட்டோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மெட்டா

Published On 2025-10-15 11:37 IST   |   Update On 2025-10-15 11:37:00 IST
  • இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
  • பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன.

இந்நிலையில், திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

இதன்மூலம் அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. அதன்படி பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகிறது

Tags:    

Similar News