தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.462 கோடி டாலர்கள் அபராதம் விதித்த பிரான்ஸ்

Published On 2019-01-22 10:00 GMT   |   Update On 2019-01-22 10:00 GMT
ஐரோப்பிய யூனியன் அமல்படுத்தி இருக்கும் பயனரின் புதிய டேட்டா விதிமுறைகளை பின்பற்றாததால் கூகுள் நிறுவனத்திற்கு சுமார் ரூ.462 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Google



ஐரோப்பா சமீபத்தில் விதித்த கடுமையான டேட்டா தனியுரிமை விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதித்துள்ளது. 

பயனரின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் பிரத்யேக விளம்பரங்களை வழங்க வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



கூகுள் நிறுவனம் ஐரோப்பாவின் பொது தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு (GDPR) விதிகளை மீறியதைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைத்தாக GDPR இருக்கிறது.

இந்த அமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பது பற்றிய விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை கவனிக்கிறது. ஐரோப்பியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கூகுள் தனது தளத்தில் மாற்றம் செய்திருந்தாலும், பிரான்ஸ் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என GDPR தெரிவித்துள்ளது.

கூகுள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் பற்றி கூகுள் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
Tags:    

Similar News