என் மலர்tooltip icon

    இலங்கை

    • முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 160 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார்.

    தம்புல்லா:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் டாசன் ஷனகா 9 பந்தில் 5 சிக்சர் உள்பட 34 ரன் குவித்தார். குசால் மெண்டிஸ் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் வாசிம் ஜுனியர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் சல்மான் ஆகா 12 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 12 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 1-1- என சமனில் முடிந்தது.

    இலங்கை அணி சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஹசரங்கா வென்றார்.

    • முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    தம்புல்லா:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தம்புல்லாவில் நடைபெற இருந்தது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படாமல் 2வது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தம்புல்லா:

    பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    தம்புல்லாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19.2 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெனித் லியாங்கே 40 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் சல்மான் மிர்சா, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டும், வாசிம் ஜூனியர், ஷதாப் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சாகிப்சதா பர்ஹான் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ஆட்ட நாயகன் விருது ஷதாப் கானுக்கு அளிக்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.
    • இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இந்தநிலையில் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    • மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
    • 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.

    வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.

    இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.

    இந்நிலையில், இலங்கை பேரிடர்- கண்டியில் இந்தியா அமைத்த தற்காலிக மருத்துவமனையில் இலங்கை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • இலங்கையில் நிலச்சரிவு, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக வீடுகள், டியிருப்புகள் மற்றும் கட்டிடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இலங்கையில் நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 341 பேரை காணவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவித்துள்ளது.

    • ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
    • கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.

    • இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 191 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.

    • அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இலங்கையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அந்நாட்டின் கடல்பகுதியில் உருவான டிட்வா புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே வெள்ளம்-நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்து உள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 488 நிவாரண மையங்களில் 43,925 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    இலங்கையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து ஆபரேசன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியது. 

    • மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

    • மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன.
    • 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது.

    தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பஸ்சை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதேசமயம் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் இறந்தனர்.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மட்டக்களப்பின் தென் கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

    இதனால் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    • இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரும் நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடரில்

    விளையாடுகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடரில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்கா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எசான் மலிங்கா அணியில் இணைந்துள்ளார்.

    மிலான் ரத்நாயக, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்கா ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷ்ரா, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, லஹிரு உதார, கமில் மிஷ்ரா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மலிங்கா

    இதேபோல், பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு டி 20 தொடருக்கான இலங்கை அணியில் முக்கிய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    சுழற்பந்து வீச்சாளரான மதீஷ பதிரன அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளார்.

    சரித் அசலங்க (கேப்டன்), பதும நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, தசுன் ஷனகா, கமில் மிஷ்ர, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க

    இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. முத்தரப்பு டி20 தொடர் 17-ம் தேதி ஆரம்பிக்க உள்ளது.

    ×