எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டும்- நாராயணசாமி
- பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான்.
- அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நாட்டின் ஒற்றுமைக்காகவும், மக்களை காக்கவும் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். புதுவையில் நான் முதலமைச்சராக இருந்த போது மோடி, அமித்ஷா ஆகியோர் கிரண்பேடியை கவர்னராக நியமித்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.
பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் மீதும், முதல்வர் மீதும் சி.பி.ஐ.க்கு அனுப்பும் பணிகளை செய்து வந்தார். இதேநிலை தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது
பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான். பொய் குற்றச் சாட்டுகளை கூறி எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி, அமித்ஷா செய்து வருகின்றனர்.
எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படும் மோடி, அமித்ஷாவை தூக்கி எறியும் வகையில், பல மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள் குழுவாக வருகிற 23-ந் தேதி சந்திக்கும் கூட்டம் நடக்கிறது.
புதுவை மாநிலத்தில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் பிரதமராக வர வேண்டும். நாகபாம்பை விட கொடியவர்கள் பா.ஜனதாவினர். பா.ஜனதாவை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.