புதுச்சேரி
புதுச்சேரியில் பைக்கில் எடுத்துச்சென்ற வெடிமருந்து வெடித்து பெண் பலி
- பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் கூடப்பாக்கம் அருகே பைக்கில் எடுத்துச்சென்ற வெடிமருந்து எதிர்பாராத விதமாக வெடித்ததில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்
பைக்கில் சென்ற இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தோர் எனத் தகவல்; காட்டுப்பன்றி வேட்டைக்காக வெடிமருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
வெடி மருந்து வெடித்ததில் நரிக்குறவர் இன பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.