ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கொல்லப்பட்டாரா?
- நேதன்யாகு ஒரு குற்றவாளி. குழந்தைகளை கொன்ற கொலையாளி
- நேதன்யாகு நடத்த வேண்டிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதும் சந்தேகத்தை அதிகரித்தது
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதம் எழுந்துள்ளது.
நேதன்யாகு கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று சமூக வலைதள வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், நெதன்யாகு கைகளைக் காண்பித்து பேசும்போது, அவரது கையில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
பொதுவாக ஏஐ மூலம் உருவாக்கப்படும் மனித உருவங்களில் இத்தகைய தொழில்நுட்பக் குறைபாடுகள் ஏற்படுவது வழக்கம்.
வீடியோவில் அவரது முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் இயற்கையாக இல்லை என்றும், அது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட Deepfake வீடியோ என்றும் பலர் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக ஈரானின் Fars மற்றும் Tasnim செய்தி நிறுவனங்கள், நேதன்யாகுவின் அலுவலகத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என்று செய்திகளை வெளியிட்டன.
கடந்த சில நாட்களாக நேதன்யாகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது மற்றும் புதிய வீடியோக்கள் எதுவும் வெளியாகாதது இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்தது.
இஸ்ரேலுக்கு வருகை தந்த அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நேதன்யாகு நடத்த வேண்டிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதும், அவர் இறந்துவிட்டார் என்ற சந்தேகத்தை அதிகரித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறும்போது, பிரதமர் நேதன்யாகு கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்திகள் போலியானவை. அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரான் புரட்சிகர காவல்படை கூறும்போது, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒரு குற்றவாளி. குழந்தைகளை கொன்ற கொலையாளியான அவர் இன்னும் உயிருடன் இருந்தால் அவரை கொல்லும் பணி தொடரும் என்று தெரிவித்தது.