உலகம்
ஈரானில் தொழிற்சாலை மீது ஏவுகணை தாக்குதல் - 15 தொழிலாளர்கள் பலி | Isfahan
- ஊழியர்களுடன் இயங்கி கொண்டிருந்தபோது தொழிற்சாலை மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
- போர் இன்று 16வது நாளை எட்டியுள்ளது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய ராணுவ நடவடிக்கை இன்று 16வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள தொழிற்சாலை மீது நடந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் உபகரணங்களைத் தயாரிக்கும் அந்த தொழிற்சாலை நேற்று ஊழியர்களுடன் இயங்கி கொண்டிருந்தபோது தொழிற்சாலை மீது ஏவுகணைகள் பாய்ந்தன.
ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இதில் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இஸ்பஹான் தாக்குதலுக்கு முன்னதாக, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு மீதும் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் அங்குள்ள ராணுவ கட்டமைப்புகள் அழிக்கபட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.