உலகம்

விரிவடையும் பிராந்திய போர்: ராஜதந்திர முயற்சிகள் குறித்து துருக்கி அமைச்சர் கூறுவது என்ன?

Published On 2026-03-15 10:25 IST   |   Update On 2026-03-15 10:25:00 IST
  • நாங்கள் தூண்டப்படுகிறோம். தூண்டப்படுவோம்.
  • போரில் இருந்து விலகி இருப்பதுதான் எங்களின் முதன்மையான முன்னுரிமை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மத்திய கிழக்கு பிராந்திய போர் விரிவடைந்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. துருக்கி அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு நட்பு நாடாகும். இந்த சண்டையில் துருக்கி விலகியே இருக்கிறது. என்றாலும் இரு நாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர ராஜதந்திர முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிடனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஹகன் ஃபிடன் பதில் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:-

ராஜதந்திர ரீதியிலான முயற்சிக்கு உகந்த சூழ்நிலை தற்போது இல்லை. துரோகம் இழைக்கப்பட்டதாக ஈரான் உணர்கிறது. ஏனென்றால், அணுசக்தி திட்டம் தொடர்பாக 2-வது முறையாக பேசிக் கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இருந்த போதிலும், எந்தவொரு விவேகமான மறைமுக ராஜதந்திர நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக நான் கருதுகிறேன்.

நாங்கள் தூண்டப்படுகிறோம். தூண்டப் படுவோம் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் துருக்கியின் டாப் முன்னுரிமை இந்த போரில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு ஹகன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.

துருக்கி அமைச்சரவையில் ஹகன் ஃபிடன் சக்திவாய்ந்த நபராக உள்ளார். அவர் அதிபர் எர்டோகனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்.

துருக்கியின் புலனாய்வு துறை தலைவராக இருந்து ஹகன் ஃபிடன், 2023-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஈரான் துருக்கி நோக்கி மூன்று ஏவுகணைகளை வீசியது. இதை துருக்கியில் உள்ள நேட்டோ வான்பாதுகாப்பு சிஸ்டம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

Tags:    

Similar News