உலகம்
ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் பலி
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில் 3 வீரர்கள் பலியாகினர்.
- ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்தது.
வாஷிங்டன்:
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கியுள்ள போர் நடவடிக்கையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அமெரிக்கா மறுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கின் அரசியல் நிலைத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.