எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் செய்வதறியாமல் தவிப்பு..!
- ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல்.
- கப்பல் சேதமடைந்த நிலையில், 150-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் வளைகுடா பகுதிகளில் தவித்து வருகின்றன.
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. பின்னர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வளைகுடா கடலில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல்கள் செல்லும் முக்கிய வழிதடமாக அமைந்துள்ளது. தற்போது வளைகுடா பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் கியாஸ், இதர சரக்கு கப்பல்கள் உள்ளன. அனைத்து கப்பல்களும் நங்கூரம் பாய்த்து அந்த இடத்திலேயே உள்ளன. ஜலசந்தி வழியாக சென்றால் ஈரான் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதால் செய்வதறியாமல் தவித்து வருகின்றன.