உலகம்

'ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி' : ஈரான் மீதான தாக்குதல் குறித்து ட்ரம்ப் பேச்சு!

Published On 2026-03-01 21:56 IST   |   Update On 2026-03-01 21:56:00 IST
  • ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
  • ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதி பலி

இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் அடைந்து வரும் வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை. ஒரே அடியில் (ஒரே நேரத்தில்) 48 தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர். மேலும் இது மிக வேகமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது." என அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இதனிடையே ஈரானின் நவீன Jamaran-class போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இருநாடுகளின் தாக்குதலில் ஈரானின் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News