உலகம்

தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கான சலுகை அல்ல.. உரிமை! - ஐ.நா பொதுச் செயலாளர் திட்டவட்டம்

Published On 2025-09-24 02:03 IST   |   Update On 2025-09-24 02:04:00 IST
  • 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  • ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, "தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் பரிசு அல்ல, மாறாக அது அவர்களின் உரிமை.

காசா பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகள் தீர்வுதான் ஒரே வழி. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும்.

1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு நாடுகள் தீர்வு இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது" என்று தெரிவித்தார்.

நடப்பு ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

முன்னதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா,போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன.

இதன் மூலம், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

இது காசாவில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது இராஜதந்திர அழுத்தத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News