உலகம்

"13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டொனால்டு டிரம்ப்" - எப்ஸ்டீன் கோப்புகளில் பகீர் தகவல்கள்

Published On 2026-02-03 02:23 IST   |   Update On 2026-02-03 02:23:00 IST
  • அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கினார்.
  • பிறந்த சிசு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை டிரம்ப் நேரில் பார்த்தார்.

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆவணங்களின்படி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கியதாகவும், அதே சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் வன்கொடுமை செய்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1984-ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில், பிறந்த குழந்தை சிசுக்ககொலை செய்யப்பட்டு  வீசப்பட்டதை டிரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட குழந்தை டிரம்ப் அல்லது பிறரின் பாலியல் உறவினால் உருவான குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடனான தனது பழைய தொடர்புகள் மற்றும் இந்த அனைத்துப் புகார்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். 

Tags:    

Similar News