உலகம்

'காலிஸ்தானியர்கள் குறித்து இந்திய உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கும் ரஷியா' - பன்னுன் எச்சரிக்கை

Published On 2024-12-15 12:52 IST   |   Update On 2024-12-15 12:58:00 IST
  • இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன்
  • ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷியா இந்திய உளவு அமைப்பான RAW விற்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

RAW வுடனும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனும் தொடர்பில் உள்ள ரஷிய அமைப்புகள் இந்த முக்கிய தகவல்களைப் பரிமாறுவதாக சீக்கியர்களுக்கான நீதி [எஸ்.எப்.ஜே] அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன், காலிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுவதாக ரஷியாவை எச்சரித்துள்ளார்.

 

ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே நியூ யார்க்கில் உள்ள ரஷிய தூதரகம் முன் எஸ்எப்ஐ உறுப்பினர்கள் போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அமரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ரஷிய தூதரகம் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்த எஸ்எப்ஐயினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

முன்னதாக குருபத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்தியாவை தொடர்புப்படுத்தி சர்ச்சை எழுந்ததும், அவர் இந்திய விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News