உலகம்
16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கும் அமேசான்
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை நீக்கியது.
- நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியை தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அறிவிப்பு.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவானாக திகழும் அமேசான் அடிக்கடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 16 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. அதன்பின் தற்போது மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்துள்ளது.
இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் சீனியர் துணைத் தலைவர் பெத் காலேட்டி கூறுகையில் "அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களுக்கு பணிநீக்க இழப்பீடு மாற்று வேலைவாய்ப்புச் சேவைகள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படுவதற்கு முன்பு நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியைத் தேடிக்கொள்ள 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்" என்றார்.