உலகம்

மார்ச் மாதம் இந்தியா செல்கிறார் கனடா பிரதமர்: இந்திய தூதர் பேட்டி

Published On 2026-01-27 12:06 IST   |   Update On 2026-01-27 12:06:00 IST
  • கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியா வருகிறார்.
  • அவரது பயணம் இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும்.

ஒட்டாவா:

அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது.

காசா அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றார்.

இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியா செல்கிறார். அவரது பயணம் இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாக இருக்கும் என கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதம் இந்தியாவு செல்ல உள்ளார். அப்போது சுமார் ரூ.17,500 கோடி மதிப்பில் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.

இந்தியாவுடன் அணுசக்தி, எண்ணெய், எரிவாயு, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளிலும், கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News