உலகம்
மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் சுட்டுக் கொலை
- உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
- மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோவில் செயல்படும் இரண்டு போதைப்பொருள் கடந்த கும்பல்களுக்கு இடையே இருந்த மோதலே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.