உலகம்

இந்தியாவும் சீனாவும் நல்ல நண்பர்கள், பங்காளிகள்: ஜி ஜின்பிங்

Published On 2026-01-26 15:26 IST   |   Update On 2026-01-26 15:26:00 IST
  • டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவது என்ற நிலையை அடைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு.
  • இருநாட்டு உறவு உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் குடியரசு தின விழாவை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தனது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியா- சீனா உறவுகள் இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும் உள்ள அடிப்படை நலன்களுக்கு ஏற்ப தொடர்ந்து மேம்பட்டு வளர்ந்து வருகிறது. இது உலக அமைதி மற்றும் செழிப்பைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நல்ல அண்டை நாடுகளாகவும், ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் இருப்பது, மேலும் 'டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவது' என்ற நிலையை அடைவது ஆகியவையே சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு என்று சீனா எப்போதும் நம்புகிறது.

இவ்வாறு ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News