உலகம்

எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி: வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்டுப்பாடு

Published On 2026-01-26 04:45 IST   |   Update On 2026-01-26 04:45:00 IST
  • வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் வினியோகம் செய்யும் லாரிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
  • இதனால் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 2,000 லாரிகளே மாலிக்குள் நுழைந்துள்ளன.

பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் எல்லைப் பகுதியில் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன.

இந்தக் குழுவினர் வெளிநாடுகளில் இருந்து எரிபொருள் வினியோகம் செய்யும் லாரிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் இந்த ஆண்டில் இதுவரை சுமார் 2,000 லாரிகளே மாலிக்குள் நுழைந்துள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4,000 லாரிகள் குறைவு.

எனவே மாலியில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், இதனை சமாளிக்க பங்கீட்டு முறை எரிபொருள் வினியோகத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

அதன்படி கார்களில் 3 நாளுக்கு ஒருமுறையும், மோட்டார் சைக்கிள்களில் 2 நாளுக்கு ஒருமுறையும் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News