உலகம்

'ஈரான்மீதான போர் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்' - டொனால்ட் ட்ரம்ப்

Published On 2026-03-11 21:56 IST   |   Update On 2026-03-11 21:56:00 IST
  • மத்தியக் கிழக்கு முழுவதும் போர்பதற்றம் நீடித்துள்ளது.
  • போரால் இந்தியா பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

ஈரான் மீதான போர் விரைவில் அல்லது எந்த நேரத்திலும் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக "கொஞ்சம் அங்குமிங்கும்... நான் எப்போது இது முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்போது இது முடிந்துவிடும்," என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஈரானில் தாக்குதல் நடத்துவதற்கு இனி "இலக்குகள் ஏதும் மிஞ்சவில்லை" என்பதால் இந்த முடிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக்கூறி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. 

ஈரானும் பதில் தாக்குதலை தொடர்ந்துவருகிறது. மேலும் அமெரிக்கா ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள்மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனால் மத்தியக் கிழக்கு முழுவதும் போர்பதற்றம் நீடித்துள்ளது. மத்தியக் கிழக்கு மட்டுமின்றி இந்தப் போரின் தாக்கம் உலகெங்கும் எதிரொலித்துள்ளது. 

தாக்குதலால் ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் எரிவாயு, எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு இந்தியா பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலகநாடுகளும் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இதனை கருத்திற்கொண்டு ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. 

Tags:    

Similar News