உலகம்
இந்தோனேசியாவில் தொடர் மழை காரணமாக கடும் நிலச்சரிவு - 25 பேர் உயிரிழப்பு
- ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக கூறப்படுகிறது
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக கூறப்படுவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது