உலகம்

பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு

Published On 2026-01-26 05:04 IST   |   Update On 2026-01-26 05:04:00 IST
  • குல் பிளாசாவில் உள்ள கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது.
  • இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ.ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 17-ம் தேதி இரவு திடீரென இங்கு தீவிபத்து ஏற்பட்டது.

குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படும் கடைகள் உள்பட கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல்வேறு கடைகளுக்குப் பரவியுள்ளது என அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்தன்று, தீப்பிடித்து கரும்புகை பரவியதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், வணிக வளாக தீவிபத்தில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், தீ விபத்தில் சிக்கிய வணிக வளாகத்தில் மீட்புப் பணிகள் முடிந்துள்ளன என தெரிவித்தார்.

Tags:    

Similar News