பாகிஸ்தான்: இஸ்லாமாபாத் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் திடீர் விலகல்
- பாகிஸ்தான் தனது பொருளாதார நிலையைச் சீர்செய்யும் முயற்சியாகப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது.
- ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது நஹ்யான், கடந்த ஜனவரி 19 இந்தியா வந்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலைய ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் திடீரென விலகியுள்ளது என் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் தனது பொருளாதார நிலையைச் சீர்செய்யும் முயற்சியாகப் பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.
ஆனால், தற்போது அந்த ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது நஹ்யான், கடந்த ஜனவரி 19 அன்று அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்தார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.