உலகம்
GRINCH oil tanker
இந்திய கேப்டனை கைது செய்த பிரான்ஸ் கடற்படை.. எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு! - ரஷியாவுக்கு தொடர்பு?
- தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.
- மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விற்பனை உட்பட பல்வேறு வணிகர்களுக்கு தடைகளை விதித்துள்ளன.
ஆனால் தடைகளை மீறி ரஷியா கப்பல்கள் மூலம் ரகசியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய தரைக்கடலில் Grinch என்ற எண்ணெய் கப்பல் பிரான்ஸ் kadarpadaiஅதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இது ரஷியாவுடையது என்று சந்தேகிக்கப்படுகிறது.
தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்த 58 வயதான இந்திய கேப்டன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மற்ற ஊழியர்கள் கப்பலிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் தற்போது பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.