உலகம்

தென் கொரிய பொருட்களுக்கு மேலும் வரி அதிகரிப்பு: அதிபர் டிரம்ப் அதிரடி

Published On 2026-01-27 08:43 IST   |   Update On 2026-01-27 08:43:00 IST
  • அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
  • குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதேபோல், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

வரி அதிகரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடம் இதுகுறித்து பேசுவோம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News