உலகம்

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை - பிரான்ஸ் பாராளுமன்றம் ஒப்புதல்

Published On 2026-01-28 10:31 IST   |   Update On 2026-01-28 10:31:00 IST
  • 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது.

பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு 15 வயதுக்குட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு 131 பேர் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றபட்டு கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதிபர் மேக்ரான் வாக்கெடுப்பை வரவேற்றார். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரை பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும், இளைஞர்கள் ஆன்லைன் தளங்களால் பாதிக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிரான்ஸ் நாட்டு குழந்தைகளின் மூளைகள் விற்பனைக்கு அல்ல என்றும், கணினி நிரலின் அடிப்படையில் அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலியாவிற்கு பிறகு சிறார்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் 2-வது நாடாக பிரான்ஸ் மாறும். உயர்நிலைப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவும் இந்த மசோதாவில் அடங்கும்.

Tags:    

Similar News