காசாவுக்காக பிளான் "பி" கிடையாது: டிரம்பின் பிளான் சிறந்தது, அது மட்டும்தான்- மார்கோ ரூபியோ
- இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது.
- ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
இஸ்ரேல்- காசா இடையிலான டொனால்டு டிரம்பின் முயற்சியால் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டாக உயிருடன் உள்ள 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் உடலையும் ஹமாஸ் அமைப்பினர் எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹமாஸ் விதிமுறையை மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.
இதனால் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால, அமைதி ஒப்பந்தத்தை வலிமையாக அமெரிக்காவின் முன்னிணி அதிகாரிகள், அமைச்சர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு பயணம் செய்தவாறு உள்ளனர்.
இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அவர் "காசாவில் நிரந்தரமான அமைதியை உருவாக்குவதற்காக, டொனால்டு டிரம்ப் தயார் செய்த ஒரு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் இல்லை. இது சிறந்த திட்டம். ஒரே திட்டம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க, அமெரிக்காவின் அனுமதி இஸ்ரேலுக்கு தேவையில்லை" என்றார்.