இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க ஹிஸ்புல்லா முயற்சிக்கிறது. இந்த முயற்சி லெபனானுக்கு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்திக்கும் வகையில் இஸ்ரேலின் பதிலடி இருக்கும். இந்த போர் இஸ்ரேலுக்கு வாழ்வா?சாவா? போன்றது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காசாவுடனான எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளை ராக்கெட்டுகளை வீசியும், புல்டோசர்கள் கொண்டு தகர்த்தும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். இந்நிலையில், காசா எல்லையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் தகர்க்கபப்ட்ட இரும்பு வேலிகளை சீரமைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இரும்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு காசா எல்லைப்பகுதியில் பாதுகாப்பை இஸ்ரேல் பலப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியாக ஹாங்காங்கின் கேதே பசிபிக் விமான நிறுவனம் டெல் அவிவ் நகருக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை தனது சேவையை ரத்து செய்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேரில் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் மற்றும் அந்நாட்டு மக்களுக்கான தனது நாட்டின் ஆதரவை மெலோனி வெளிப்படுத்தினார். இதேபோல், சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோதவுலைட்சும் நேதன்யாகுவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
உயிர் வாழத் தேவையான மனிதாபிமான உதவிப் பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா இன்று அனுப்பியுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காசாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் சென்றடைந்த போதிலும், தாக்குதல் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேற்று வரை காசாவில் 4385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில் 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். காசாவில் 13,561 பேர் காயம் அடைந்துள்ளனார்.
இஸ்ரேல் நாட்டில் இருநது 203 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகிறது.
காசாவில் உள்ள மருத்துவமனையில் எரிபொருள் தீர்ந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் 130 குறைமாத குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஆச்சர்யமாக பார்க்கும் நபர்கள், மேற்கு கரையில் இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகளின் தவறான தாக்குதலால் ஐந்தில் ஒரு பங்கு ராக்கெட்டுகள் காசாவில் விழுந்ததால், பாலஸ்தீனியர்கள் படுகாயம். கடந்த 24 மணி நேரத்தில் 550 ராக்கெட்டுகள் இவ்வாறு ஏவப்பட்டதாக தெரிகிறது.