உலகம்
LIVE

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

Published On 2023-10-08 09:44 IST   |   Update On 2023-11-05 13:22:00 IST
2023-10-21 15:38 GMT

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் சலே அல் அருரி குடும்பத்தாரை இஸ்ரேல் படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2023-10-21 14:58 GMT

காசா மீது தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் லண்டனில் பேரணி. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டிய நிலையில் இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2023-10-21 12:19 GMT

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கெய்ரோ அமைதி மாநாட்டில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ​​​​இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் இரு தரப்பிற்கும் ஆயுதங்களை வழங்குவதை நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

2023-10-21 10:53 GMT

ஹமாஸ் அமைப்புடனான போரின் எதிரொலியாக, எகிப்து மற்றும் ஜோர்டான் நாட்டில் உள்ள இஸ்ரேலியர்களை விரைவில் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

2023-10-21 05:41 GMT

இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகள் விடுவிப்பு, தாக்குதலில் பாதிப்பை ஏற்படுத்தாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023-10-21 02:26 GMT

இன்னும் பிணைக்கைதிகள் ரிலீஸ் ஆகும்வரை தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தாமதப்படுத்த வேண்டும் என ஜோ பைடன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

2023-10-21 02:24 GMT

வடக்கு காசா பகுதியில் இணையத்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்

2023-10-21 01:30 GMT

ஹமாஸ்- இஸ்ரேல் போரில் நேற்று வரை 4137 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் 1400 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

2023-10-21 01:28 GMT

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இரண்டு அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்துள்ளது.

2023-10-20 14:59 GMT

"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் கீழ் அடுத்த விமானம் இஸ்ரேல் டெல் அவ்விலிருந்து டெல்லிக்கு அக்டோபர் 22-ம் தேதி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, பயணப் படிவத்தை ஏற்கனவே பூர்த்தி செய்தவர்களுக்கு தூதரகம் உறுதிப்படுத்துவதற்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. இந்த விமானத்தைப் பயன்படுத்த விரும்பும் பிற இந்திய மக்கள் விரைவாக பயணப் படிவத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News