உலகம்
LIVE

இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

Published On 2023-10-08 09:44 IST   |   Update On 2023-11-05 13:22:00 IST
2023-10-20 14:40 GMT

காசா அருகே முகாமிட்டு இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். இஸ்ரேலிய வீரர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ” சிங்கம் போல ராணுவ வீரர்கள் போரிட்டார்கள். தொடர்ந்து இப்படியேதான் போரிடுவார்கள்” என்றார்.

2023-10-20 14:38 GMT

காசா அருகே முகாமிட்டு இருக்கும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார். இஸ்ரேலிய வீரர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ” சிங்கம் போல ராணுவ வீரர்கள் போரிட்டார்கள். தொடர்ந்து இப்படியேதான் போரிடுவார்கள்” என்றார்.

2023-10-20 14:01 GMT

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், ஒவ்வொரு 15 மணி நேரத்துக்கும் குறைந்தது ஒரு குழந்தையாவது பலி ஆவதாகவும், இதனால் அங்கு உடனடியாக போர் நிறுத்தம் அங்கே அமலாக வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக்கான ’சேவ் தி சில்ட்ரன்’ எனற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2023-10-20 13:20 GMT

காசாவில் உள்ள பிரதான மருத்துவமனையில் வெறும் 24 மணி நேரம் மட்டுமே தாக்குபிடிக்கும் அளவுக்கு மின்சாரம் இருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு மின்சார விநியோகம் இல்லை என்றால் அங்கு சிகிச்சை பெறும் பல நோயாளிகள் இறக்கக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

2023-10-20 07:41 GMT

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேச முயன்றதாகவும், பாலஸ்தீன அதிபர் அதை தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2023-10-20 05:12 GMT

அமெரிக்க தலைமை உலகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. முற்றிலும் வேறுபட்ட, கணிக்க முடியாத, ரத்தக்களரி போருக்கு மத்தியில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது இன்றியமையாதது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

2023-10-20 03:25 GMT

மத்திய கிழக்கு நிலைமை உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்து வருவதாக ஜப்பான் நிதிமந்திரி தெரிவித்துள்ளார்.

2023-10-20 03:22 GMT

காசா முனையில் உள்ள தேவாலய வளாகத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் இங்கு தஞ்சம் அடைந்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2023-10-19 15:17 GMT

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது. நேதன்யாகுவுடனான சந்திப்பு நிறைவடைந்ததும் பேசிய ரிஷி சுனக் கூறுகையில், "இந்த இருண்ட காலத்தில் நண்பனாக துணை நிற்பதில் பெருமையடைகிறேன். உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம். நீங்கள் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும்; நீங்கள் வெல்வதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

2023-10-19 15:14 GMT

போர் குறித்து இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினரான ஷாரன் ஹெஸ்கல் (Sharren Haskel) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"பயங்கரவாத எனும் பாம்பின் தலையாக ஈரான் செயல்படுகிறது. அந்த தலையான ஈரானை நாம் வெட்ட வேண்டும். ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இரு அமைப்புகளுக்கும் ஈரான் நிதியுதவி செய்து வருகிறது. அனைத்து இஸ்ரேலியர்களும் ஒற்றுமையாக உள்ளனர்" என்றார்.

Tags:    

Similar News