இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, காசாவில் மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெிரவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சில வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பல வடகொரிய ஆயுதங்களை ஈரான் பயங்கரவாத குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக ஆயுத நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் உதவிகளை தடுத்து நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போர் விமானம் மத்திய காசா மீது நடத்திய தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,402 பேர் உயிரிழந்துள்ளனர். 4,475 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காசாவில் 3,488 பேர் உயிரிழந்துள்னளர். 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 1,500 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு கரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 பேர் காயம் அடைந்துள்ளனர்.
லெபனானில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகமான பாலஸ்தீனர்களை கொல்வதுன் மூலம், இஸ்ரேல் மிகவும் பாதுகாப்பானதாகாது- பாலஸ்தீனத்தின் ஐ.நா. தூதர்
மேற்கு கரையில் உள்ள ரமல்லா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோ பைடன் இஸ்ரேல் சென்ற நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்கிறார்
காசா நகர் மீது இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்துள்ள நிலையில் அந்நாட்டு விமானப்படை காசா மீது தாக்குதல் நடத்தி உள்ளது.