இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் தூதர்களை வெளியேற்ற ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் கச்சா எண்ணெய் தடைக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். அப்போது, " ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பிணைக் கைதிகளாக பொது மக்களையும், குழந்தைகளையும் கூட வைத்துள்ளனர். இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் " என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.
பாலஸ்தீன அமைப்பான இஸ்லாமிக் ஜிகாத், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளது. இஸ்ரேல் வேண்டுமென தங்கள் மீது குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே ஏவுகணை வீச்சின்போது, தோல்வி ஏற்பட்டது இவருர் பேசும்போது இடைமறித்த ஆடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலை மறுக்கும் இஸ்ரேல், செயற்கைக்கோள் படத்தை வெளியிட வேண்டும் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றடைந்தார்.
எங்களால் தற்போதைக்கு போரை நிறுத்த முடியாத நிலை உள்ளதால், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜோர்டான் தெரிவித்துள்ளது.
காசா மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலுக்கு அங்குள்ள அமைப்புதான் (Islamic Jihad) பொறுப்பு. பலி எண்ணிக்கை மிகைப்படுத்தப்படுகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவின் அல்-அக்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஜோர்டான் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.