உலகம்

ஓமன் நாட்டின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

Published On 2025-12-18 22:56 IST   |   Update On 2025-12-18 23:40:00 IST
  • பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
  • பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

மஸ்கட்:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் நாட்டுக்குச் சென்றார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் ஓமன்' என்ற விருது வழங்கப்பட்டது.

இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

ஓமன் அளித்த இந்த விருதுடன் சேர்த்து 29 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார்.

சமீபத்தில், அவருக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News