உலகம்

குரங்குகள்.. ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட டிரம்ப் - மன்னிப்பு கேட்க மறுப்பு

Published On 2026-02-07 14:38 IST   |   Update On 2026-02-07 14:38:00 IST
  • வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன்.
  • நான் எந்த தவறும் செய்யவில்லை.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதை நான் பகிர்ந்தேன். அது சரிபார்க்கப்பட்டிருக்கும் என்று கருதினேன். ஆட்சேபனைக்குரிய பகுதி பற்றி எனக்கு தெரியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

Tags:    

Similar News