உலகம்

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: அதிர்ச்சியில் பாகிஸ்தான், சீனா

Published On 2026-02-08 04:40 IST   |   Update On 2026-02-08 04:40:00 IST
  • இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இந்திய வரைபடத்தை வெளியிட்டது.
  • அதில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.

வாஷிங்டன்:

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் செய்து அமெரிக்காவின் ஆதரவைப்பெற முயற்சி செய்தனர். சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீர் ஒற்றுமை தின உரையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இதுகுறித்து சர்ச்சையான கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக கட்டமைப்பு இன்று அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தில், ஜம்மு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா காட்டியுள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் வெளியிட்ட இந்த வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய எல்லைக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தமட்டில் அமெரிக்காவின் முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேபோல், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Tags:    

Similar News