உலகம்

ஈரான் ஒருபோதும் சரணடையாது: டிரம்பிற்கு காமேனி பதில்

Published On 2025-06-18 17:27 IST   |   Update On 2025-06-18 17:27:00 IST
  • ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது.
  • சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை போராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார்.

நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகார தலைவரான அயதுல்லா அலி காமேனி "ஈரான் ஒருபோதும் சரணடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அயதுல்லா அலி காமேனி "இந்த விவகாரத்தில் ஈரான் ஒற்றுமையாக நிற்கிறது. ஒருபோதும் ஈரான் சரணடையாது. அமெரிக்கா ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், சரிசெய்ய முடியாத அளவிற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News