உலகம்

அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

Published On 2025-07-07 13:21 IST   |   Update On 2025-07-07 13:21:00 IST
  • சில மாதங்களில் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்துள்ளது.
  • டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இதில் 28 குழந்தைகளும் அடக்கம்.

மேலும் 41 பேர் மாயமானதாக கூறப்படுவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Tags:    

Similar News