உலகம்

நேரலையில் 13 லட்சம் பேர்.. டொனால்டு டிரம்ப் - எலான் மஸ்க் நேர்காணல்..

Published On 2024-08-13 07:17 IST   |   Update On 2024-08-13 07:17:00 IST
  • டிரம்ப்-மஸ்க் நேர்காணலை 13 லட்சம் பேர் நேரலையில் கேட்டனர்.
  • அதிபர் தேர்தலை ஒட்டி டிரம்ப்-மஸ்க் நேர்காணல் நடைபெற்றது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. உலகம் முழுவதிலும் நேரலையில் நடைபெற்ற இந்த நேர்காணலை சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற இருந்த நேர்காணல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்கள் வரை தாமதமாக துவங்கியது. நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் மற்றும் தற்போது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியை கடுமையாக சாடினார்.

 


மேலும், தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, "அது தோட்டா என்று எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. அது என் காதை பலமாக தாக்கியதும் தெரிந்தது. கடவுள் மீது நம்பிக்கை அற்வர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன், இந்த விஷயம் குறித்து பரிசீலனை செய்ய துவங்குங்கள்."

"அத்தகைய சூழ்நிலையில் துணிச்சலாக இருப்பது போல் நடிக்க முடியாது. தைரியம் உள்ளுணர்வா இல்லையா? அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான் நலமுடன் இருப்பதை தெரிவிக்கவே, உடனடியாக எழுந்து நின்றேன். அவர்கள் அதற்கு ஆரவாரம் செய்தனர்," என்றார்.

Tags:    

Similar News