உலகம்
பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்க வங்கதேசம் பேச்சுவார்த்தை
- வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு அமைந்தது
- வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தையை வங்கதேசம் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்கவும், வங்கதேச விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் கேட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
குறிப்பாக வங்கதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வங்கதேச அரசு நேரடி விமான சேவையை வருகிற 29-ந்தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு இரு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.