செய்திகள்

டிரம்ப்பை சுட்டுக் கொல்வதாக மிரட்டிய அமெரிக்கருக்கு 37 மாதம் சிறை

Published On 2018-12-19 11:39 GMT   |   Update On 2018-12-19 11:39 GMT
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டிய நபருக்கு 37 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #USman #threateningTrump #killTrump
வாஷிங்டன்:

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்ட். தவறான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெப்ரஸ்கா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்கு தோல்வியில் முடிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஜெர்ராட், நெப்ரஸ்கா நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக தொடர்ந்து மிரட்டினார். மேலும், நீதிமன்ற குமாஸ்தா மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.


இதைதொடர்ந்து, அவரை மோப்பம் பிடித்து கைது செய்த போலீசார், அரிசோனா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஸ்டீவன் பி லோகன், குற்றவாளி ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்-டுக்கு 37 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

விடுதலைக்கு பின்னர் அவரை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் வைத்திருக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். #USman #threateningTrump #killTrump
Tags:    

Similar News