செய்திகள்

பாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் தற்கொலை - 2 தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைப்பு

Published On 2018-07-21 10:03 GMT   |   Update On 2018-07-21 10:03 GMT
பாகிஸ்தானில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #PakistanPolls
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் மாகாணத்துக்கான சட்டசபை தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்நாட்டின் முக்கிய கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், முன்பு எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் என்.ஏ-103 என்ற பாராளுமன்ற தொகுதி மற்றும் பி.பி 103 என்ற பஞ்சாப் மாகாணத்தின் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மிர்ஷா முகமது அகமது முகல் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மிர்ஷா முகமது அகமது முகல் போட்டியிட்ட என்.ஏ-103 மற்றும் பி.பி 103 ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #PakistanPolls
Tags:    

Similar News