உலகம்
பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவில் விமான சேவை கடும் பாதிப்பு
- பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு முன்னெச்சரிக்கை காரணமாக 1,191 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,974 விமானங்கள் தாமதமாகி உள்ளன. நியூயார்க், சிகாகோவில் அதிகளவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
நியூயார்க் நகரில் ஒரே இரவில் 10 அங்குலம் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.