தமிழ்நாடு செய்திகள்
சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்து சிறுமிகள் பலி
- கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
- கமலிகா, ரிஷிகா கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது கேட் விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பெண் காவலரின் மகளும், அவரது உறவினர் மகளுமான கமலிகா, ரிஷிகா கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென கேட் சிறுமிகள் மீது விழுந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நான்காண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டின் கேட் இடிந்து விழுந்து சிறுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.