சென்னை சாலி கிராமத்தில் த.வெ.க. நிர்வாகி மீது தாக்குதல்
- சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
- தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், வெங்கடேசா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர் த.வெ.க வட்ட செயலாளராக உள்ளார்.
இவர் இரவு சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் பஸ் நிலையம் அருகே கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மற்றொரு வட்ட செயலாளர் உட்பட 4 பேர் சேர்ந்து சுரேந்திரனை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயம் அடைந்த சுரேந்திரன் கே.கே. நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள் 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் ரிலீசுக்காக கோயம்பேட்டில் உள்ள சினிமா தியேட்டரில் சுரேந்திரன் வைத்த கட் அவுட் மற்றும் பேனரில் ஒரு சில நிர்வாகிகள் பெயரை போடவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் சுரேந்திரனை தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.