தமிழ்நாடு செய்திகள்

நிகிதா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

Published On 2025-07-09 19:34 IST   |   Update On 2025-07-09 19:34:00 IST
  • குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை.
  • சிபிஐக்கு மாற்றப்பட்டதால் இதுவரை என்ன நன்மை நடந்திருக்கிறது.

திருப்புவனம், மடப்புரத்தில் அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-

குற்றம் வெளிப்படையாக தெரிகிறது. நகை திருடினார் என்பது குற்றச்சாட்டு என்றால் ஏன் நகையை திரும்ப மீட்கவில்லை. ஏனென்றால் அவர் நகையை எடுக்கவில்லை என்று தானே அர்த்தம்.

அப்போ, பொய்யான குற்றச்சாட்டிற்கு நீ அடித்துக் கொன்று இருக்கிறாய்.

குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை. இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது.

உங்கள் காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?.

சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான்.

சிபிஐக்கு எத்தனையோ வழக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது. சிபிஐக்கு மாற்றப்பட்டதால் இதுவரை என்ன நன்மை நடந்திருக்கிறது.

காவல்துறை முதலமைச்சரின் இலாகாவில் தானே இருக்கிறது. அப்போது, நேர்மையற்ற காவல்துறையின் தலைவர் நேர்மையற்றவர் தானே.

உங்களுடைய காவல்துறை நேர்மையாக விசாரிக்காது என்றால், அப்போது உங்களுடைய காவல்துறை நேர்மையற்றது.

நிகிதா மீது ஏன் இதுவரை விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News