தமிழ்நாடு செய்திகள்

மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி- செங்கோட்டையன்

Published On 2025-12-14 17:18 IST   |   Update On 2025-12-14 17:18:00 IST
  • செங்கோட்டையன் தலைமையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு.
  • அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாகன பிரசாரம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் வருகிற 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முழு ஏற்பாட்டில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் விஜயின் வாகன பிரசாரம் நடைபெற உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தற்போது வரை வாகன பிரசாரத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. அதைப்பற்றி கவலைப்படாமல் த.வெ.க.வினர் பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.

இன்று காலை செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் பெருந்துறை அடுத்த சரளையில் பிரசாரம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செங்கோட்டையன் முன்னி லையில், பெருந்துறையில் மறைந்த அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி பெரியசாமியார் அண்ணன் அருணா ச்சலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.விலிருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

அவர்களுக்கு செங்கோட்டையன் த.வெ.க துண்டை போட்டு வரவேற்றார். பின்னர் அவர்களுடன் புகை ப்படங்கள் எடுத்துக்கொ ண்டார்.

இதை அடுத்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருந்துறை தொகுதியில் அணி அணியாக த.வெ.க.வில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர்.மக்கள் சக்தியாக எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கு மக்கள் சக்தியோடு த.வெ.க தலைவர் விஜய் வரும் 18-ம் தேதி பெருந்துறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் அவரது உரை இருக்கும்.

பெருந்துறையில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்திற்கான பணி இன்று தொடங்கப்பட்டு விட்டது.த.வெ.க.வில் விருப்ப மனு பெரும் தேதி குறித்து தலைவர் விஜய் அறிவிப்பார். விருப்ப மனு பெறப்பட்ட பிறகு வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் அறிவிப்பார்.த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் நடத்த காவல்துறையினர் தரப்பில் கேட்கப்பட்ட 84 கேள்விகள் தற்போது மாறிவிட்டது. அனைவரும் பாராட்டும் வகையில் எங்களது பணி இருக்கும்.

சீனாபுரத்தை சேர்ந்த தி.மு.க.வினர் தற்போது த.வெ.க.வில் இணைய உள்ளனர்.தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலா இணைப்பதற்கான நடை பெறும் பேச்சுவார்த்தை குறித்து அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.தேர்தல் களம் எவ்வாறு செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

த.வெ.க-அதிமுக கூட்டணி அமையுமா ? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். த.வெ.க.விற்கு போட்டி என்று யாரையும் சொல்லவில்லை.தனிப்பட்ட முறையில் யார் போட்டி என கருத்து சொல்ல முடியாது. த.வெ.க.விற்கு மக்கள் சக்தி உள்ளது.மக்கள் சக்தியால் த.வெ.க தலைவர் விஜய் முதல்-அமைச்சர் ஆவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News