தமிழ்நாடு செய்திகள்

யாராக இருந்தாலும் Left Hand-ல் டீல் செய்துவிடுவார் முதல்வர்- அமைச்சர் சேகர் பாபு

Published On 2025-07-05 18:40 IST   |   Update On 2025-07-05 18:40:00 IST
  • முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
  • மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார்.

பரந்தூர் விமான நிலையம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியதற்கு அமைச்சர் பி.கே. சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:-

தவெக தலைவர் விஜயை முதலில் மக்களை நோக்கி பயணத்தை தொடங்க சொல்லுங்க. பயணத்தையே செப்டம்பரில் தான் தொடங்குவேன் என்றார்.

நேற்று காத்திருந்த தொண்டர்களைக் கூட பார்க்கவில்லை என்கிற செய்திகளும் வந்தது. அவர் முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

மக்களை பாதுகாக்க எங்கள் மக்களின் முதல்வர் இருக்கிறார். நிச்சயமாக அவரது முன்னெடுப்பிலே யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், அதேநேரத்தில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில்தான் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைக்கின்றபோது, மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார்.

எடுத்தேன் கவுத்தேன் என்பது போல், கடந்த காலங்களைப்போல் எங்கள் முதல்வர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி ஒரு திட்டத்தை கொண்டுவருவதற்கு நிச்சயமாக முற்படமாட்டார்.

அதனால், தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்ற அரைக்கூவல் எல்லாம், அரைக்குள் இருந்தே விட்டுக் கொண்டிருக்கிறார்.

யாராக இருந்தாலும் முதல்வர் எளிதாய கையாண்டுவிடுவார். ஆங்கிலத்தில் சொல்லவார்களே முதல்வர் Left Hand-ல் டீல் செய்துவிடுவார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News