தமிழ்நாடு செய்திகள்

கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கும் முதல்வர் - சீமான்

Published On 2025-08-14 19:41 IST   |   Update On 2025-08-14 20:05:00 IST
  • திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை சீமான் நேரில் சந்தித்தார்.
  • அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்பட்டு வேளச்சேரி திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்.

மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வுசெய்தது மக்களின் தவறு. ஆட்சியாளர்களை குறை சொல்ல நமக்கு தகுதி இல்லை. ஏனெனில் அஆட்சியை நிறுவியதே நாம்தான்.

அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது. இன்றைக்கு அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சத்திற்கு காப்பீடு உள்ளிட்டவை கொடுப்போம் என்கிறது.

தூய்மைப்பணி தனியாரிடம் செல்லும்போது அரசு ஏன் இதெல்லாம் வழங்குகிறது? அனைத்தும் கொடுக்கும் அரசு, நிரந்தர வேலையையும் கொடுக்கலாமே.

பணியில் எடுக்கும்போதே அரசுப்பணி என்று சொல்லித்தானே எடுத்தார்கள். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா. தனியார் முதலாளிகளின் பொறுப்பா" என்று கேள்வி எழுப்பினார்.   

Tags:    

Similar News